உரையாடல்


யா
ருமற்ற ஈரச்சந்தையில்
தக்காளிகளை அடுக்குகிறாள்.
முகத்தில் ரகசியமாய் ஒரு புன்னகை.
அங்கே தக்காளிகளே இல்லாதது போல.
அங்கே யாருமே இல்லாதது போல.
உள்ளிருந்து வருகிறது ஒரு குரல்.
“என்ன்..ன?”
ன் க்கும் ன வுக்கும் இடையே 
புரள்கிறது ஒரு குட்டி அலை.
நல்லவேளை…
ஒரு விதையளவு காலம் தாமதத்திருந்தால்
அங்கு எதுவுமே இல்லாது போயிருக்கும்.

Comments